நாமக்கலில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கம்

 

நாமக்கல்: நாமக்கலில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கம். ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம். நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாமக்கல்லில் இருந்து 77 கண்டெய்னர்களில் கப்பல் வாயிலாக அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் ஏற்கனவே நிறுத்தபட்டுள்ளது. சவுதி, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாமக்கல் மண்டலத்திலுள்ள 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் ஆறு கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், துபாய், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரேன், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மத்திய கிழக்கில் நடைபெறும் சண்டையில் அவ்வட்டாரத்திற்கான முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

“ஈரானின் ஜெபல் அலி துறைமுகத்தில் வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அங்கு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. விமானம் மூலம் முட்டைகளை அனுப்ப 2,000 டாலராக இருந்த கட்டணம் 6,000 டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் நாமக்கல்லில் உள்ள கிடங்குகளில் கிட்டத்தட்ட 20 கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன,” என்று நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். “ரமலான் மாதம் என்பதால் வளைகுடா நாடுகளில் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. போர் நடைபெறுவதால் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

Related Stories: