அதனால் சாலையோரம் நிறுத்திவிட்டு பஞ்சர் கடையை தேடி டிரைவர் சென்றார். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தமிழக அரசு சொகுசு பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஞ்சராகி நின்ற வேன் மீது மோதியது. இதில் பஸ் எதிர்திசையில் வலதுபுறமாக பாய்ந்து தடுப்பு கம்பிகளை உடைத்து சர்வீஸ் சாலைக்கு வந்து அங்குள்ள சிலாப் மீது ேமாதி நின்றது.
இதில் சரக்கு வேனில் இருந்த இஞ்சி மூட்டைகள் சாலையில் சிதறியது. பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார், பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்குள்ளான வாகனங்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு சென்ற சரக்கு வேன் மீது பஸ் பயங்கர மோதல்; பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.