தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது 6 வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த விவகாரத்தில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் நடிகை கஸ்தூரியை தீவிரமாக தேடிவந்தனர். இதனை அடுத்து அவர் தலைமறைவானதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

தனிப்படையினர் தீவிரமாக தேடிய நிலையில் ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கடந்த 16-ம் தேதி கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தி பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமின் கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக தனது குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த ஜாமின் மனு மீதான விசாரணை 14வது எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி தயாலன் முன்பு நடைபெற்றது. அப்போது சிறப்பு குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறை தரப்பில் எந்த வித ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

The post தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: