8 மாதங்களாக கர்ப்பிணியாக பள்ளி வந்த பிளஸ் 2 மாணவி: ஆசிரியர்கள் டிசி கொடுத்து அனுப்பினர்


தொண்டாமுத்தூர்: கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோரை அழைத்து மிரட்டி கடந்த 12ம் தேதி டிசி வழங்கியுள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

8 மாதம் ஆகியும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் போனது எப்படி? என்றும், திடீரென டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டது ஏன்? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post 8 மாதங்களாக கர்ப்பிணியாக பள்ளி வந்த பிளஸ் 2 மாணவி: ஆசிரியர்கள் டிசி கொடுத்து அனுப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: