விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் 100 இந்திய பயணிகள்: விமான நிலையத்தில் 80 மணி நேரமாக தவிப்பு


புதுடெல்லி: தாய்லாந்தில் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகள் 80 மணி நேரத்திற்கு மேலாக தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தாய்லாந்து நாட்டின் ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால் அந்த விமானத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்டனர். அப்போது விமான பயணிகளுக்கு எவ்வித வசதியும் செய்து தராததால், அவர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மறுநாள் (24 மணி நேரம் கழித்து) விமானம் மீண்டும் பறக்கத் தயார் செய்யப்பட்டது. பயணிகள் அதே விமானத்தில் ஏற்றறப்பட்டனர். ஆனால் மீண்டும் விமானம் இயங்காததால் பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இன்று காலை வரை கூட கிட்டத்தட்ட 80 மணிநேரத்திற்கு மேலாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து தரப்படாததால் ஃபூகெட்டில் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக எந்த பதிலும் தரவில்லை. இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், ‘பயணிகள் அனைவரும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது. பல பயணிகள் மாற்று விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். 40 பயணிகள் மட்டுமே விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது ஃபூகெட்டில் உள்ளனர். இன்று மாலைக்குள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் 100 இந்திய பயணிகள்: விமான நிலையத்தில் 80 மணி நேரமாக தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: