ரஷ்யாவுக்கு எதிரான போரில் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு 2 மாதங்கள் உள்ள நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஜோ-பைடன் நிர்வாகம் உதவிகளை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகனைகளை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்து உக்ரைனுக்கு அனுமதியளித்தது. இதனை அடுத்து இன்று 275 மில்லியன் டாலர் புதிய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 1001வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேற்று அமெரிக்காவின் தொலைதூர ஏவுகனைகளை கொண்டு உக்ரைன் ரஷ்யாவை தாக்கியதை அடுத்து, அணு ஆயுத பயன்பாடு தொடர்பான கொள்கைகளை ரஷியா மாறியமைத்துள்ளது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் அடக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

The post ரஷ்யாவுக்கு எதிரான போரில் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: