அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட் சாப்பிட்ட 39 பேருக்கு ஈ கோலி பாக்டீரியாவால் நோய் தொற்று : ஒருவர் உயிரிழப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட் மற்றும் பேபி கேரட் சாப்பிட்ட 39 பேருக்கு ஈ கோலி பாக்டீரியாவால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஈ கோலி தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 மாகாணங்களில் ஈ கோலி தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் நியூயார்க், வாஷிங்டனில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் பல்வேறு அங்காடிகளுக்கு ஆர்கானிக் கேரட்டை க்ரீம் வெ பார்ம்ஸ் என்ற நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஈ கோலி தொற்று பாதிப்பை அடுத்து விற்பனைக்கு அனுப்பிய ஆர்கானிக் கேரட்டை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. கடைகளில் இருந்த ஆர்கானிக் கேரட்டுகள் திரும்பப் பெற்றுள்ள நிலையில், தங்களது வீடுகளில் அவற்றை வைத்திருப்பவர்கள் அதனை எங்கு வாங்கினார்களோ அங்கேயே திருப்பி கொடுக்கும்படி அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தி உள்ளது. ஈ கோலி தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வயிற்று வலி, வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.

The post அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட் சாப்பிட்ட 39 பேருக்கு ஈ கோலி பாக்டீரியாவால் நோய் தொற்று : ஒருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: