நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான கண்காணிப்புக் குழு அமைப்பு!!

நெல்லை : நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான கண்காணிப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசணை வெளியிட்டுள்ளது. வட்டாட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் அல்லது மாநில அரசால் புதிய குழு அமைக்கும் வரை இருக்கும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு..

1. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் : குழுவின் தலைவர்

2. தாசில்தார் (தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி) – உறுப்பினர்

3.துணை இயக்குநர்/உதவி இயக்குநர், நகர மற்றும் ஊரமைப்புத் துறை, தென்காசி மாவட்டம்
– உறுப்பினர்

4.கே.ராஜாராம், பூவுலகின் நண்பர்கள், 2/7, மேலத்தெரு, முள்ளிகுளம், கடையநல்லூர் தாலுக்கா, தென்காசி மாவட்டம் – உறுப்பினர்

5.டாக்டர். M. செல்வி, M.Sc., Ph.D., உதவிப் பேராசிரியர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), குற்றாலம், தென்காசி மாவட்டம் – உறுப்பினர்

6.டாக்டர் ஆர். கந்தசாமி, எம்.எஸ்சி., பிஎச்.டி., உயிரியலாளர், திருநெல்வேலி – உறுப்பினர்

7.செயற்பொறியாளர், (WRO), பொதுப்பணித்துறை, சிற்றார் பேசின் பிரிவு, தென்காசி – உறுப்பினர்

8. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தென்காசி
– உறுப்பினர்

9. துணை இயக்குநர்/உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, தென்காசி – உறுப்பினர்

10.மாவட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர், திருநெல்வேலி – உறுப்பினர் செயலாளர்

The post நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான கண்காணிப்புக் குழு அமைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: