இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சங்கர் நேற்றுமுன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், வீடுகளை அகற்றக்கூடாது என்று கூறி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவேற்காடு – அம்பத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் 200க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் ஐமல் ஜமால் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ், திருவேற்காடு நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கையைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதில் பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர்.
The post கோலடி ஏரி விவகாரத்தில் தொழிலாளி தற்கொலை பொதுமக்கள் சாலை மறியல்: கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.