தழைச்சத்து அதிகமாக இட்ட வயல்களிலும், நிழல் இருக்கும் பகுதிகளிலும் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படும். இப்புழுக்கள் நெற்பயிரின் இலைகளிலுள்ள பச்சையத்தை உண்பதால் இலைகள் வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் எரிந்ததுபோல் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளில் அதிக உரம் இட்ட பகுதிகளிலும் காணப்படுகிறது. இத்தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வரப்புகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தை பரிந்துரைக்கும் அளவுக்கு மேல் இடாமல், தேவையான அளவு முதல் 3 முதல் 4 முறை பிரித்து இடவேண்டும்.
விளக்கு தீப்பொறியை மாலை 6.30 முதல் இரவு 10 மணி வரை எரியவிட்டால் அந்தப் பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி அளவு நடவு செய்த 37 மற்றும் 44 மற்றும் 51 நிமிடங்களில் காலை நேரத்தில் வயலில் இருந்து புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம். வரப்புகளில் புல், பூண்டுகளை அகற்றி வயல்வெளிகளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். தழைச்சத்து உரத்தினை தேவைக்கு அதிகமாகவும் ஒரேடியாக மொத்தமாகவும் போடக்கூடாது.
வயலில் காணப்படும் தரை வண்டுகள், ஒட்டுண்ணிகள், குளவிகள், நீர்தாண்டி, நீர் மிதப்பான், தட்டான்கள், இடுக்கி வால் பூச்சிகள் போன்றவை நன்மை செய்யும் பூச்சிகளையும் மற்றும் சிலந்தி போன்றவற்றையும் பாதுகாக்க வேண்டும். தாவர பூச்சிக் கொல்லிகளான வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் அல்லது அசாடிராக்டின் 1 சதம் ஏக்கருக்கு 400 மில்லி அல்லது பேசில்லஸ் துரின்சியென்சிஸ் என்ற எதிர் உயிரி பாக்டீரியத்தை ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீருடன் ஒட்டும் திரவம் சேர்த்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் இலைகள் மீது தெளிக்க வேண்டும். எனவே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் இலைச் சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம் என இவ்வாறு கூறியுள்ளார்.
The post ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்தலாம்: வேளாண்மை இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.