பாலிஹோஸ் நிறுவனம் தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: பாலிஹோஸ் நிறுவனம் தொடர்புடைய சென்னை கிண்டி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள பாலிஹோஸ் தொழிற்சாலையில் 7 வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாலிஹோஸ் நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பாலிஹோஸ் நிறுவனம் தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: