வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம் எழுதி உள்ளது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் நவ. 25 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம் எழுதி உள்ளது. தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வசதியாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச் சந்திரன் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை வருவாய் நிர்வாக ஆணையர், மீன்வளத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை மறுநாள் உருவாகவுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் வரும் நவ.23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். அடுத்த 2 நாட்கள் இதே திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை நோக்கி இந்த அமைப்பு நகர்வதையும் மேலும் வலுப்பெறுவதையும் தொடர்ச்சியான கண்காணித்து வருகிறோம், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: