வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் மீண்டும் 3வது முறையாக தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் தொழில் பங்குதாரரான மருமகன் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு சொந்தமான கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 6 இடங்களிலும், மேற்கு வங்கம், கர்நாடகம், உத்தரபிரதேசம், மேகாலயா, பஞ்சாப் மாநிலம் உட்பட 22 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆவணங்கள், பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத மார்ட்டின், ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் நிறுவனங்களில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட ஆவணங்களை கணக்காய்வு செய்யப்பட்டு அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ரூ.6.42 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கி அமலாகத்துறை நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை, கோவை உள்பட 22 இடங்களில் சோதனை லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜூனாவிடம் ரூ.12.41 கோடி ரொக்கம் பறிமுதல்: ரூ.6.42 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது appeared first on Dinakaran.