இத்தகைய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேரும் பலியாகினர். கோவில் யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், யானை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
பின்னர், ஆய்வுக்குப் பிறகு மாவட்ட வன அலுவலர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும். இது பெண் யானை, மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால், அது தாக்குதல் நடத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
The post பெண் யானைக்கு மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை.. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால் யாராலும் கணிக்க முடியாது: ஆய்வுக்குப் பிறகு மாவட்ட வன அலுவலர் பேட்டி appeared first on Dinakaran.