வடகிழக்கு பருவமழை, கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டி நூலக கலையரங்கத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மண்டல அனைத்து பொறியாளர்களுடன் வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் பருவமழை, கோடை காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் பகிர்மான மற்றும் தொடர்புடைய தலைமை பொறியாளர்கள் மேற்பொறியாளர்கள், செயல்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த ஆய்வின் போது சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்படும் நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு பிரிவு அலுவலர்களிடம் அதற்கான காரணங்களை அமைச்சர் கேட்டறிந்தார். மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய உத்தரவிட்டார். சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடியில் துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் கூடுதலாக 310 வளைய சுற்றுத்தர அமைப்புகள் ரூ.51 கோடி செலவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மண்டலத்தில் 4 இடங்களில் ரூ.96.20 கோடியில் துணை மின் நிலையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. தடையில்ல மின்சாரம் வழங்குவதற்கு தேவையான தளவாடபொருட்கள் மற்றும் உபகரணங்களை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகப்பான முறையில் பணிகளில் ஈடுபடவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 9498794987 கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடகிழக்கு பருவமழை, கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: