இதே போல் ஒரு வாட்சப் குரூப் தொடங்கி அதிலும் திராவிடத்தை தரைகுறைவாகவும், சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கையை பரப்பும் வகையிலும் சமஸ்கிருதத்தை படிக்கும்படியும் பேராசிரியர் தொடர்ந்து பேசியதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து மாணவர்கள் துணைவேந்தரிடம் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால் துணை வேந்தர் தரப்பில் மாணவர்கள் மத்தியில் வாய்மொழியாகவே புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் இதுவரை மாணவர்கள் எழுத்து பூர்வமாக புகார் தெரிவிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தரப்பில் எழுத்து பூர்வமாகவும் துணைவேந்தரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தனர். மாணவர்கள் புகார் தொடர்பாக துணைவேந்தர் பஞ்சநாதன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் பேராசிரியர் ரெங்கநாதனை 6 மாதம் கட்டாய விடுப்பில் செல்ல துணைவேந்தர் உத்தரவிட்டார். மேலும், எழுத்துப்பூர்வமாக வந்துள்ள புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post பாஜகவுக்கு ஆதரவாக மாணவர்களிடம் பிரச்சாரம் செய்த திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை. பேராசிரியர் மீது நடவடிக்கை..!! appeared first on Dinakaran.