கன்னங்குளத்தில் பொது கழிப்பறை சீரமைப்பு

நாகர்கோவில், நவ. 17: நாகர்கோவில் மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட கன்னன்குளம் பகுதியில் பொது கழிப்பறை பழுதுபட்டு காணப்பட்டது. இதனை சீரமைக்க அந்த பகுதி மக்கள், வார்டு கவுன்சிலர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கழிப்பறையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி சீரமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி செயற்பொறியாளர் ரகுராமன், மண்டல தலைவர்கள் ஐவஹர், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், உதவி பொறியாளர் சுஜின், இளநிலை பொறியாளர் செல்வன் ஜார்ஜ், கவுன்சிலர் பியாஷா ஹாஜி பாபு, தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் சதாசிவன், மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஹாஜி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கன்னங்குளத்தில் பொது கழிப்பறை சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: