கும்பகோணத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

 

கும்பகோணம், நவ.17: கார்த்திகை முதல் நாள் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் மாலை அணிந்து விரத்தை துவங்குவர். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாலை அணிந்து விரதத்தை துவ ங்க, நேற்று முன்தினம் துளசி மாலை, வேட்டி உள் ளிட்ட பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.

இதையடுத்து, நேற்று அதிகாலை கும்பகோணம் யானையடி அய்யனார் கோயிலில் அதிகாலை முதலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்று க்கணக்கான ஐயப்ப பக்த ர்கள் புனிதநீராடி, காவியுடை அணிந்து நீண்டவரி சையில் காத்திருந்து பூர்ண புஷ்கலா அம்பாள் சமேத தர்ம சாஸ்தா அய்யனார் சுவா மிகளுக்கு தாங்கள் அணிந்து கொள்ளும் மாலையை வைத்து, அர்ச்சனைகள் செய்து பயபக்தியுடன் வழிபட்ட பிறகு சரணகோஷம் முழங்க, சானிகம் தியாகராஜ குருக்கள், குருசாமி ரமேஷ் மற்றும் குருக்கள் நிரஞ்சன் ஆகியோர் திருக்கரங்களால், மண்டியிட்டபடி, அய்யப்பன் டாலர் கொண்ட துளசி மற்றும் சந்தன மாலைகள் அணிந்து கொண்டு, சபரி யாத்திரை சென்று ஐயப்பனை தரிசிக்க முறைப்படி விரதம் தொடங்கினர்.

 

The post கும்பகோணத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: