மதுரை, நவ. 16: மதுரை, பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று மதியம் 2 மணியளவில் இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை மாலை 5 மணியளவில் தான் பள்ளி நிர்வாக ஊழியர் பார்த்துள்ளார். அதற்குள் பள்ளி முடிந்து மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேறி இருந்தனர். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தனியார் பள்ளியில் போலீசார் நடத்திய சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.