உடுமலை, நவ.17: உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கணக்கப்பாளையம் ஊராட்சியில் வசிக்கின்ற பொதுமக்கள் நிலுவையில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, காலி மனையிடவரி, தொழில்வரி, கடை உரிம கட்டணம் உள்ளிட்டவற்றை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சிறப்பு வரி வசூல் முகாம் வருகிற டிச.5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி மாலை ஊராட்சி தலைவர் காமாட்சி அய்யாவு முன்னிலையில் வரி பாக்கியை செலுத்திய பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக அரை கிராம் தங்க நாணயமும், மூன்றாம் பரிசாக கால் கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் 50 பேருக்கு ஒரு கிராம் வெள்ளி காசு வழங்கப்பட உள்ளது. குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை செலுத்தாதவர்கள் வைப்புத்தொகை செலுத்தி ரசீது பெற்று வைத்துக் கொள்ளவும். வைப்புத்தொகை செலுத்தாத குடிநீர் உள்ள இணைப்புகள் துண்டிக்கப்படும்.
இவர் கூறப்பட்டுள்ளது.
The post வரி பாக்கியை செலுத்தினால் தங்க நாணயம் பரிசு appeared first on Dinakaran.