இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுவதாக கூறினார். மனுதாரர் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் ஐபிசி 354 ஏ பிரிவின் கீழ் குற்றமாக அமையாது என்று அவர் தெரிவித்தார். இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்வதாக கூறிய அவர், இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார். சிறார் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமாகாது என்று ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளாகி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post “வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் குற்றம் ஆகாது” :நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு appeared first on Dinakaran.