இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேலுமணி முன்பு இன்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணங்களின் நகர்வு மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் 300க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களாக இருப்பதாகவும் ஏற்கனவே 100 பேருக்கு மேல் முன்ஜாமீன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் புலன்விசாரணை முன்னேற்றத்துடன் நடந்து வருகிறது.
விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியுடன் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்கு தான் நடக்கிறது என்று அவர் வேதனை தெரிவித்தார். மேலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல்துறை தான் பணியில் இருக்கிறீர்கள் தேவையில்லாமல் காவல்துறையினரை குற்றம்சாட்டுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டதால் சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பி.எஸ். தரப்பினருக்கு எதிரான வழக்கு: விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.