சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி: அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதி செய்யப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை காவல்நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள் க்ரில் கேட்டை திறக்க முயன்றபோது க்ரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதே போல் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்து இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வங்கி லாக்கர்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போல் காவல்துறை உயர் அதிகாரிகள்,தடயவியல் துறையினர் கொள்ளையர்களை கண்டுபிடிக்க மோப்பநாய் உதவியுடன் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பழைய குற்றவாளிகள் இத்தகைய கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களா? அல்லது புது குற்றவாளிகளா என்பது தொடர்பாக ஒரு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராகளையும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பணம் ஏதேனும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், வங்கியில் அதிகாரிகள், காவல்துறையினர் நடத்திய ஆய்வில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதியானது.

 

The post சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி: அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதி appeared first on Dinakaran.

Related Stories: