கோவை: பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஒம்கார் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கைதான இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கோவை அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜியை போலீசார் ஆஜர்படுத்தினர். ஓம்கார் பாலாஜியை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் ஓம்கார் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.