குழந்தைகள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

சென்னை: குழந்தைகளின் கனவுகள் ஈடேற துணை நிற்போம் என குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: மழலை மாறாத சிரிப்புடன், கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும், சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை. நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம். வளமான, நலமான, பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம். நமது உலகையும் வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post குழந்தைகள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி appeared first on Dinakaran.

Related Stories: