டாலருக்கு எதிராக ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிவு..!!

டெல்லி: டாலருக்கு எதிராக ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது. சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று 2 காசுகள் சரிந்து ரூ.84.41ஆக இருக்கிறது. நேற்று வர்த்தக நேர முடிவில் டாலருக்கு ரூ.84.39ஆக இருந்த மாற்று மதிப்பு இன்று 2 காசு குறைந்து ஒரு டாலர் ரூ.84.41 ஆக சரிந்துள்ளது. எனினும் செவ்வாய்க்கிழமை சந்தையில் டாலர்களை விற்பனை செய்ததால் ரூபாய் சற்று மீட்சி பெற்றது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து 11வது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு முடிவே இதற்கு காரணம் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்கு அந்நியச் செலாவணிச் சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டது. ரிசர்வ் வங்கியின் தலையீட்டை அடுத்து ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.84.37 என்ற அளவில் நிலைப்பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மாறாக இந்திய பங்குச்சந்தையானது கடும் சரிவை சந்தித்து வருகிறது.

The post டாலருக்கு எதிராக ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: