சென்னை: உள்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி ரூ.50 கோடியாக உயர்த்தப்பட உள்ளது. மானியம், வங்கிக்கடன் என பொருளாதார ரீதியாக உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய நிறுவனங்கள் போலவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.