இந்த கிராம நிர்வாக அலுவகத்திற்கு, பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், பழங்குடி சான்று உள்பட அனைத்து விதமான அரசு சான்றிதழ்களை பெற தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை சுற்றி முட்செடிகள் படர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகிலேயே அமர்ந்து சில குடிமகன்கள் மது அருந்திவிட்டு, அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளுக்கு சென்று அசுத்தம் செய்கின்றனர். இதனால், கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், குடி போதையில் அலுவலகத்தில் இருக்கும் மின் மீட்டர், தண்ணீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்துகின்றனர். இதனால், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் பொன்னேரி வருவாய் துறை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் அரசு வேளாண்மை அலுவலகக் கிடங்கும் உள்ளது. இந்த அலுவலகங்களை சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்படாததால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, ஒருங்கிணைந்த அரசு வருவாய் கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீஞ்சூர் பேரூராட்சியைச் சேர்ந்த கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மீஞ்சூர் பேரூரில் ஒருங்கிணைந்த அரசு வருவாய் கட்டிடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.