இதனிடையே பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் உள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியது. இருந்தாலும் பேஜர் தாக்குதல் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இஸ்ரேல் அமைதி காத்து வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர், வாக்கி டாக்கி வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த உத்தரவிட்டதை ஒப்புக் கொண்டார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஓமர் தோஸ்த்ரி உறுதி செய்துள்ளார்.பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலும் தான் ஒப்புதல் வழங்கிய பின்னரே நடந்ததாக நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து அவருடன் 3 முறை பேசிவிட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
The post லெபனானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பேஜர், வாக்கி – டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! appeared first on Dinakaran.