இந்நிலையில், இதே குற்றச்சாட்டில் ஷகேரி மூலமாக இலங்கையில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மீது பயங்கர துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்ட அதிர்ச்சித் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இலங்கையில் மிகப்பெரிய துப்பாக்கி சூடு நடத்தி இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை கொல்ல வேண்டுமென ஷகேரிக்கு ஈரான் ராணுவம் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 23ம் தேதி இலங்கையின் அறுகம்பை பகுதியில் சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள் தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தன.
அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேறவும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் 2 பேரை இலங்கை போலீசார் கைது செய்தனர். அந்த நபர்கள் ஷகேரியுடன் சிறையில் ஒன்றாக இருந்தவர்கள். முதலில் இலங்கையில் உள்ள தூதரகத்தை வேவு பார்க்கும் பணியை முடித்த பிறகு இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கும் பணியை ஈரான் ராணுவம் தன்னிடம் ஒப்படைத்ததாக ஷகேரி கூறியதாக எப்பிஐ குறிப்பிட்டுள்ளது.
கைதான நபர்கள் அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வரும் இடங்களை கண்காணித்துள்ளனர். ஏற்கனவே சில வழக்குகளில் கைதாகி அமெரிக்க சிறையில் 14 ஆண்டுகள் இருந்தவரான ஷகேரி தனக்கான தண்டனையை குறைப்பதற்காக ஈரான் அரசு மூலம் சதி திட்டங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்திருப்பதாக எப்பிஐ கூறி உள்ளது. ஆனால் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஈரான் மறுத்துள்ளது.
The post டிரம்பை கொல்ல நியமிக்கப்பட்ட நபர் மூலம் இலங்கையில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை கொல்ல சதிதிட்டம்: ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.