இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் நீர் வளங்களை மேம்படுத்துவதிலும், அவற்றின் மேலாண்மை மற்றும் அணைகள் கட்டுவதிலும் தனது தொலைநோக்கு பார்வை மூலம் அம்பேத்கர் முக்கிய பங்காற்றி உள்ளார். ஒன்றிய நீர் ஆணையம் அமைப்பதிலும், முக்கிய ஆற்றுப்படுகை திட்டங்களிலும் அம்பேத்கர் முக்கிய பங்கு வகுத்துள்ளார். ஆனால், நாட்டின் அதிகரித்து வரும் நீர் பாதுகாப்பின் தேவையில் காங்கிரஸ் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. நீர் பாதுகாப்பாளராக அம்பேத்கரை அங்கீகரிக்காமல் புறக்கணிக்கவும் செய்தது.
21ம் நூற்றாண்டின் முக்கிய சவால் நீர் பாதுகாப்பு. 21ம் நூற்றாண்டில் சரியான நிர்வாகத்துடன் போதுமான நீர் வளம் கொண்ட நாடுகள் மட்டுமே முன்னேறும். கடந்த காங்கிரஸ் அரசுகள் அடிக்கல் நாட்டி 35 முதல் 40 ஆண்டுகள் வரை திட்டங்களை தாமதப்படுத்தின. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். அம்பேத்கர் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவு தபால் தலை மற்றும் நாணயம் ஒன்றையும் மோடி வெளியிட்டார்.
The post நீர் வளத்தை மேம்படுத்துவதில் அம்பேத்கரின் பங்களிப்பை காங்கிரஸ் புறக்கணித்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.