பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

ராசிபுரம், நவ.10: ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டி புதூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அழியா இலங்கை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஐப்பசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கூனவேலம்பட்டி புதூர், குருக்குபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் தங்களது வீடுகளில் அரிசி சாதம் சமைக்காமல், குழம்பு வைக்கும் போது எண்ணெய் கொண்டு தாளிப்பதை தவிர்த்து அதற்கு மாறாக சோளம், கம்பு, திணை உள்ளிட்ட மாற்று உணவுகளை உண்டு விரதம் மேற்கொள்வார்கள். வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். கிராம மக்கள் விரதத்தை முடிக்கும் விதமாக, பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வாழைப்பழங்களை கொண்டு வந்து வைத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறது. இதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் வாழை பழங்களை வைத்து வழிபட்டனர்.

The post பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: