இந்த நூலுகம் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 8 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது. இந்த நிலையில், கட்டட வடிவமைப்பு தயார் செய்யவும், ஆலோசகர்களை தேர்வு செய்யவும் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு, வரைபடம் பொது பணித்துறையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகளுக்கான டெண்டர் கோரப்படும்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘பிரமாண்ட நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் தனித்தனியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவும், அறிவியல் மையம், விளையாட்டு மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவு, ஏஐஐ (ஆர்டிபிசியல் இண்டலிஜன்ட்ஸ் பிரிவு), அறிவுசார் மையம், உள்ளிட்ட பிரிவுகள் அமைய உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெருமையை அறிவிக்கும் விதமாக ஒரு ஆர்ட் கேலரி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதைபோல், ஆயிரம் பேர் அமரக்கூடிய ஒரு பிரமாண்ட கூட்ட அரங்கமும் அமைய உள்ளது. நூலகத்தின் கட்டுமான பணிகள் ஜனவரி 2026ல் முடிந்து பயன்பாட்டிற்கு வரலாம்’’ என்றனர்.
The post திருச்சியில் ரூ.290 கோடியில் 8 தளங்களுடன் உலக தரத்தில் கலைஞர் நூலகம் டெண்டர் கோரியது அரசு: 2026ல் பயன்பாட்டிற்கு வரும் appeared first on Dinakaran.