கரூர்: கலைஞர் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கடந்த மாதம் 7ம் தேதி அன்று கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை அக்டோபர் 14ம் தேதி அன்று வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், வழக்கறிஞர் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சீமான் மீது வழக்கு பதிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக தாந்தோணிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறாக பேசியது, அதன் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கலைஞர் குறித்து அவதூறு சீமான் மீது வழக்கு appeared first on Dinakaran.