இதைத் தொடர்ந்து, கடலோர பகுதிகளில் கடற்பசு அதிக அளவில் காணப்படுகிறது. இந்தியாவிலேயே தஞ்சை மாவட்ட கடல் பகுதிகளில் தான் கடற்பசு அதிக அளவில் உள்ளதால், மனோரா பகுதியில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மனோராவை மையமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு கடற்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரிய கடல் வாழ் பாலூட்டி உயிரினமாக கடற்பசு உள்ளது. கடல் வளத்திற்கு முக்கிய காரணமானது கடற்பசு.
கடற் பசு பாதுகாக்கப்பட்டால் கடல் வளம் பாதுகாக்கப்படும். அதன் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரமும் பெரிதும் காப்பாற்றப்படும். முக்கியமாக, அதிராம்பட்டினம் தொடங்கி அம்மாபட்டினம் கடல் வரை கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்தது. அரிதான கடற்பசு இனம் தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ளது. இதையடுத்து கடற்பசு இனத்தையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்க மன்னார் வளைகுடா, பாக்விரிகுடா பகுதிகளில் கடல்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதனை செயல்படுத்தும் விதமாக அதிராம்பட்டினம் தொடங்கி அம்மாபட்டினம் கடல் வரை கடற்பசு பாதுகாப்பாக அமைக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக பாக் நீரிணையில் 448 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைய உள்ளது குறிப்பிடதக்கது. கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால் கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள புற்கள் பாதுகாக்கப்படும். வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்த கடற்பசு பாதுகாப்பகம் உதவும். கடற்புல் படுக்கைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக மேம்படுத்தப்படுத்தப்படுகிறது.
தற்போது, 240 கடற்பசுக்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடல் பகுதிகளிலேயே காணப்படுவதாகவும் கடற்பசுக்களின் வாழ்விடங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, கடற்பசு இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வனத்துறை சார்பாக மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி மதிப்பில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு தமிழக வனத்துறை சார்பில் டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post நாட்டிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் கடற்பசு பாதுகாப்பு மையம்: வனத்துறை டெண்டர் கோரியது appeared first on Dinakaran.