ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த 2020ல் தொடங்கியது. இப்பணியை 2022ல் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா காரணங்களால் பணிகளை முடிக்க 2 ஆண்டுகள் கூடுதலானது. தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. வரும் 20ம் தேதி பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, புதிய பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த அக்.22ம் தேதி பாலத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக 4 பெட்டிகளைக் கொண்ட ரயிலை 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தண்டவாளத்தில் அதிர்வு ஏற்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், வரும் 13, 14 ஆகிய தேதிகளில் இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
The post 90 கி.மீ வேகத்தில் பாம்பன் புதிய பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை appeared first on Dinakaran.