கோவையில் 100 ஆண்டு பழமையான வணிக வளாகம் இடித்து அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

கோவை: கோவையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் இன்று இடித்து அகற்றியது. கோவை பெரியகடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் 25 கடை, அலுவலகங்கள் செயல்பட்டது.இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்தது.

இதையடுத்து ஆலய நிர்வாகத்தின் சார்பில் கோவை மாநகராட்சியில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று காலையில் அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக கடந்த வாரம் அந்த கட்டிடத்திற்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கும் பணியையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post கோவையில் 100 ஆண்டு பழமையான வணிக வளாகம் இடித்து அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: