அதிபர் தேர்தலில் 277 எலக்டோரல் வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு

வாஷிங்டன்: நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 51 சதவீத வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 277 எலக்டோரல் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ளார்.

அதிபர் தேர்தல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழத்து தெரிவித்துள்ளனர். டொனால்ட் டிரம்பை தனது நண்பர் என குறிப்பிட்டு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் மேலும் வெற்றிக்காக போராடிய கமலாஹாரிஸின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post அதிபர் தேர்தலில் 277 எலக்டோரல் வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு appeared first on Dinakaran.

Related Stories: