இதாங்க நம்ம பாரம்பரிய உழவு மாநில சதுரங்க விளையாட்டு போட்டி

 

ஜெயங்கொண்டம், நவ.6: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் வழிப்பாட்டு கூட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். ஆசிரியர் இங்கர்சால், ,செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநில அளவில் திருப்பத்தூரில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசு, சான்றிதழ் பெற்ற சிம்மவாகினியையும்,மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள கேரம் போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவிகள் கீர்த்தனா, நிவேதாவையும், மாவட்ட அளவில் கேரம் போட்டியில் இரண்டாமிடம் வெற்றி பெற்ற மாணவிகள் திவ்யா, அபிலஷா, இவர்களையும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.வெற்றி பெற பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷாவை தலைமையாசிரியர் பாராட்டி வாழ்த்தினார், இதில் ஆசிரியர்கள் சாந்தி, மஞ்சுளா, அமுதா, பாவை சங்கர், சுரும்பார்குழலி, சங்கீதா, அருட்செல்வி கவிதா, தமிழாசிரியர் இராமலிங்கம் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரயர் மரகதம் நன்றி கூறினார்.

The post இதாங்க நம்ம பாரம்பரிய உழவு மாநில சதுரங்க விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: