கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே இடிந்து விழும் ஆபத்தான பள்ளி வகுப்பறை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கி.முதலிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளது.
இங்கு கிளாங்காடு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாணவ மாணவிகளின் நலன் கருதி முதலாவதாக அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்த பள்ளி வகுப்பறை கட்டிடமானது தற்பொழுது ஓடுகள் பெயர்ந்து பராமரிப்பின்றி சிதலமடைந்து கிடக்கிறது.
இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் அருகே அமைந்துள்ளதால் எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கோ, விளையாடுவதற்கோ அச்சப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு தற்போது பராமரிப்பின்றி சிதலமடைந்து கிடக்கிறது.
எனவே பள்ளி வகுப்பறை கட்டித்தை சீரமைக்க வேண்டும் என கிளாங்காடு பொதுமக்கள், பெற்றோர், பள்ளி மாணவர்கள் அரசுக்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post கறம்பக்குடி அருகே இடிந்து விழும் ஆபத்தான பள்ளி வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.