இந்த போட்டியில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1700 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என வகைப்படுத்தபட்டு 10 வயது முதல் 70 வயது வரை என இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டி குறித்து தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் செயலாளர் வேல் சங்கர் பேசுகையில், “குருநானக் கல்லூரியில் உள்ள சதாகிரி ஷூட்டிங் அகாடமி வளாகத்தில் 33வது அகில இந்திய ஜிவி மாவ்லங்கர் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது. வருகிற 11ம் தேதி வரை இப்போட்டி நடக்கிறது. மேலும் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்கள் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க வாய்பு கிடைக்கும்” என்று கூறினார்.
The post சென்னையில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம்: 200க்கும் மேற்பட்ட தமிழக போட்டியாளர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.