×

ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு மிகக்கடும் பதிலடி தரப்படும்: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

துபாய்: ‘இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அழிவுகரமான மிகக் கடும் பதிலடி தரப்படும்’ என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மிரட்டல் விடுத்திருப்பதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 1ம் தேதி இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஏவி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், கடந்த 26ம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதியில் உள்ள 20 ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரானில் அனைத்து அதிகாரங்களும் படைத்த உச்ச தலைவர் அயதுல்லா கமேனி (85) பேசிய வீடியோ ஒன்று அந்நாட்டு அரசின் டிவி சேனலில் வெளியிடப்பட்டது. அதில் கமேனி, ‘‘நமது எதிரிகள், அது இஸ்ரேலாகட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும், ஈரான் மக்களுக்கும், இந்த தேசத்திற்கும், ராணுவத்திற்கும் எதை அவர்கள் கொடுத்தார்களோ, அதே போன்ற மிகக்கடுமையான அழிவுகரமான தாக்குதலை நிச்சயம் பெறுவார்கள்’’ என்றார்.

* இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்
கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு காசாவின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 84 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மத்திய இஸ்ரேலுக்கு உட்பட்ட தலைநகர் டெல் அவிவின் வடக்குப் பகுதிகயை நோக்கி லெபனானில் இருந்து மூன்று வான்வழி ஏவுகணை ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் கட்டிடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு மிகக்கடும் பதிலடி தரப்படும்: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Iran ,Israel ,United ,States ,Middle East ,Dubai ,Supreme Leader ,Ayatollah Khamenei ,United States' ,Supreme ,
× RELATED மழை நீர் தேங்கியதால் தங்க இடமில்லை;...