அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் உயர்மட்ட குழு, நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பை குறைக்க பரிந்துரை செய்தது. இதனால் நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பு ‘இசட்’ பிரிவில் இருந்து ‘ஒய்’ பிரிவாக குறைக்கப்பட்டது. இதனால் அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பெரும்பாலான போலீசார் திரும்ப பெறப்பட்டுள்ளனர்.
இனிமேல் நவீன் பட்நாயக்கிற்கு ஹவில்தார் தரத்தில் 2 போலீஸ்காரர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு அவரது பிஜூ ஜனதாதளம் கட்சி எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. பொதுவாக ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பிரிவில் 2 வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். அமைச்சர்கள் அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு தரப்படும். பாதுகாப்பு படைகளிலேயே மிகவும் கடைநிலையில் உள்ள பிரிவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒடிசா எதிர்கட்சி தலைவரான மாஜி முதல்வரின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்: ‘ஒய்’ பாதுகாப்பு மட்டும் வழங்கல் appeared first on Dinakaran.