மேலும் கிறித்துவ தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான பள்ளிகளில் அதிக சம்பளத்தில் ஆசிரியர் பணி மற்றும் OA பணி காலியாக உள்ளதாக வாதியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி வாதி தனக்கு தெரிந்த 5 நபர்களிடம் இருந்து ரூ. 25 லட்சத்தை வாங்கி எதிரியிடம் கொடுத்துள்ளார், பணத்தை பெற்றுக்கொண்ட எதிரி 5 நபர்களுக்கு போலியான பணிநியமன ஆணை வழங்கியுள்ளதும் மேலும் 6 நபர்களிடம் இதேபோல் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 26 லட்சம் வரை மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவினர் தலைமறைவாக இருந்த எதிரியை தேடி வந்த நிலையில் 29.10.2024ம் தேதி மேற்படி வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவசங்கரி என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து வழக்கு சம்மந்தமான போலியான பணிநியமன ஆணைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரம் அடங்கிய ஆவணங்கள் மற்றும் எதிரியின் கைபேசி ஆகியவற்றை கைப்பற்றியும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கமாறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணை கொடுத்து ஏமாற்றிய பெண் உடற்பயிற்சி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.