விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனைவியை வெட்டவந்தபோது தடுத்த மாமியாரை உதைத்த மருமகன் கைது

பெரம்பூர்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனைவியை வெட்டவந்தபோது தடுத்த மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகனை கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மதி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மனோகர் கடந்த 2000ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர்களுக்கு வினோத்குமார் (27), விஜயலட்சுமி (25) என்ற மகள், மகள் உள்ளனர். இந்தநிலையில், செந்தூரப்பாண்டி என்பவரை மதி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவரது மகள் விஜயலட்சுமி, குறளரசன் (31) என்பவரை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

இந்தநிலையில், இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 9 மாதங்களாக பிரிந்து தனது தாய் வீட்டில் விஜயலட்சுமி வசிந்துவந்து இருக்கிறார். இதனிடையே விஜயலட்சுமி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுபற்றி தெரியவந்ததும் குறளரசன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு மணி அளவில் விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்த குறளரசன் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்து உள்ளார். அதற்கு விஜயலட்சுமி,‘‘உன்னுடன் வர முடியாது’’ என்று தெரிவித்துள்ளதார். இதனால் கோபம் அடைந்த குறளரசன், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியை வெட்ட முயன்றுள்ளார். ஆனால் விஜயலட்சுமி வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டதால் தப்பினார்.

மேலும் அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தாய் மதி வந்து தடுத்தபோது குறளரசன், மாமியார் மதியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் காயம் அடைந்த மதியை மீட்டு பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக கொடுத்த புகாரின்படி, ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குபதிவு செய்து குறளரசனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனைவியை வெட்டவந்தபோது தடுத்த மாமியாரை உதைத்த மருமகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: