இதில் 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்தனர். ஆனால் கால்பந்து திடல்களை தனியாருக்கு தரக்கூடாது என பல்வேறு தரப்பினும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநகராட்சி வாபஸ் பெற்றது.
The post கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியாருக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்யும் தீர்மானம் வாபஸ்!! appeared first on Dinakaran.