காமன்வெல்த் மாநாடு நவ.5ல் ஆஸ்திரேலியா செல்கிறார் சபாநாயகர் அப்பாவு

சென்னை: நவம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் நடைபெற இருக்கும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறா ர். சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளர் சுப்பிரமணியமும் உடன் செல்கிறார். இருவரும் நவ.2ம் தேதி இரவு 11.25 மணிக்கு சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மலேசியா நாட்டிற்கு சென்று, பின்பு சிட்னி நகருக்கு 5ம் தேதி சென்றடைவார். மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு நியூசிலாந்து நாட்டிற்கு சென்று, பின்னர் 17ம் தேதி இரவு 10.10 மணிக்கு சிங்கப்பூர் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.

The post காமன்வெல்த் மாநாடு நவ.5ல் ஆஸ்திரேலியா செல்கிறார் சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Related Stories: