நம்பிக்கையால் வறுமையை வென்ற சிறுவனுக்கு குவியும் பாராட்டு: படித்துக்கொண்டே டீ விற்ற சிறுவனின் குடும்பத்திற்கு வீடு வழங்கிய ஆட்சியர்

தருமபுரி: தருமபுரி அருகே வறுமையின் காரணமாக பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் டீ விற்று குடும்பத்தை கவனித்து வந்த சிறுவனுக்கு தனியார் அறக்கட்டளையின் பங்களிப்புடன் மாவட்ட ஆட்சியர் வீடு வழங்கி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சையத் பாட்ஷா, வாஹிரா தம்பதியினரின் மூத்த மகன் அப்ஷார். 10ம் வகுப்பு படித்து வரும் அப்ஷார், குடும்ப வறுமை காரணமாக பள்ளி முடிந்த மீதிநேரத்தில் டீ விற்று அதில் வரும் பணத்தை தாயிடம் கொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருநாள் வழக்கம்போல ஒக்கேனக்களில் அப்ஷார் டீ விற்று கொண்டிருந்தபோது சிறுவனின் நிலையை கேட்ட சுற்றுலா பயணிகள் அதனை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ ஓசூரில் உள்ள தனியார் அறக்கட்டளைகளின் நிர்வாகிகள் கண்ணில் பட சிறுவனுக்கு அவர்கள் உதவி செய்ய முன்வந்தனர். சிறுவன் அப்ஷாரின் குடும்ப செலவுக்காக மாதம் 7,500 ரூபாய் தர முடிவு செய்த அறக்கட்டளை நிர்வாகிகள் அதனை தருமபுரி ஆட்சியர் முன்னிலையில் வழங்கினர். அப்போது சிறுவனுக்கு சொந்தவீடு கட்டித்தர முடிவு எடுத்த மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீட்டை அறக்கட்டளையின் உதவியுடன் வழங்கினார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்க்கை மாறும் என்பதற்கு சிறுவன் அப்ஷாரும் ஒரு உதாரணம்.

The post நம்பிக்கையால் வறுமையை வென்ற சிறுவனுக்கு குவியும் பாராட்டு: படித்துக்கொண்டே டீ விற்ற சிறுவனின் குடும்பத்திற்கு வீடு வழங்கிய ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: