சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 09.11.2023, 10.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையில், தமிழக அரசால், 09.11.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை 09.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)-க்கு பதிலாக, 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளாக மாற்றியமைத்து அறிவித்துள்ளது.
The post வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நடத்தப்படும் சிறப்பு முகாம் தேதிகளில் மாற்றம் appeared first on Dinakaran.