பெங்களூருவில் விதிகளைமீறி கட்டப்பட்ட 5 மாடி குடியிருப்பு இடித்து அகற்றம்

பெங்களூரு: பெங்களூருவில் விதிகளை மீறி 250 சதுர அடியில் கட்டப்பட்ட 5 மாடி குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டுள்ளது. பாபுசா பாள்யா என்ற இடத்தில் தரமின்றி கட்டப்பட்ட 6 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்களை கண்டறிந்து அவற்றை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒட்டுமொத்தமாக இடிந்து விழுந்தது. பெங்களூரு, கே.ஆர்.புரம் பாபுசாப் பாளையத்தில் 6 அடுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடந்து வந்தது. கட்டிட பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக அவர்கள் கட்டிடத்தின் உள்ளேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார்கள். தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் டைல்ஸ் பதிக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தொடர்ந்து மழை பெய்து ஈரத்தன்மை அதிகம் இருந்த நிலையில் கட்டிடம் உறுதிதன்மையை இழந்து சீட்டுகட்டு சரிவது போல் ஒவ்வொரு மாடியும் கீழே சரிந்து இடிந்தது. அப்போது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அபாயக்குரல் எழுப்பினர்.

அந்த கட்டிடத்தின் உள்ளே தொழிலாளர்களின் குடும்பமும் இருந்ததால் குழந்தைகள், பெண்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

ஆனாலும், போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பெங்களுருவில் உள்ள அனைத்து இடங்களிலும் விதிகளை மீறி 250 சதுர அடியில் கட்டப்பட்ட 5 மாடி குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டுள்ளது.

 

 

The post பெங்களூருவில் விதிகளைமீறி கட்டப்பட்ட 5 மாடி குடியிருப்பு இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: